எவ்ளோ நீராக இருந்தாலும் வாரி சுருட்டுவது எப்படி? நெல்லை ஆயன்குளம் அதிசய கிணற்றின் மர்மம் விலகியது!
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு நிரம்பாததற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி ஊராட்சியில் உள்ளது ஆயன்குளம் அதிசய கிணறு. ஒவ்வொரு மழை, வெள்ளப்பெருக்கின் போது பல ஆயிரம் கனஅடி உபரி நீர் இந்த கிணற்றுக்கு அனுப்பப்படும்.

ஆனால் அந்த கிணறு மட்டும் நிரம்பி வழிந்ததே இல்லை என்கிறார்கள். இது அதிசயம் என சொல்லி வந்தனர். அது போல் இந்த முறையும் குமரி கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் 1 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள் பல ஆயிரம் கன அடி நீர் திருப்பி விடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அனுப்பிய நீரையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது. அதிலும் ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் போது இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. அதனால் இதை அதிசயமாகவே பார்க்கிறார்கள்.
இந்த வெள்ளம் என்றில்லை, கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் கிணற்றுக்குள் சென்றது. அப்போதும் கிணறு நிரம்பவில்லை. இந்த அதிசய கிணறு குறித்து ஆய்வு நடத்த ஐஐடி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்த அதிசய கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீரில் இயங்கும் கேமராக்களை செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக இருக்கிறது. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன் சுண்ணாம்பு பாறைகளில் ரியாக்ஷன் ஆகி அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் மிகப் பெரிய குகைகளாக மாறியது தெரியவந்தது. சில கிணறுகளில் கால்வாய் போன்று உருவாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் ட்ரோன் இயந்திரங்களை இறக்கி ஆய்வு செய்தனர். 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றாலே கிணறு நிரம்பிவிடும், ஆனால் கிணறு நிரம்பாததற்கு சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள்தான் காரணம்.
பாறைகளை மழைநீர் துளைத்து குகைகளாக மாற்றுகிறது. இதனால் கிணற்றில் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் உருவாகியிருக்கின்றன. நெட்வொர்க் போல் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாகியுள்ளன. பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இதனால் சுற்றுபுறத்தில் இருக்கும் கிணற்றின் நீர் மட்டம் உயர்ந்து கொண்ட போகிறது. இவ்வாறு ஐஐடி ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications