மிக் ஜாம் புயல்! எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்? 8 மாவட்ட மக்கள் மிக கவனமாக இருக்கணும்!
சென்னை: மிக் ஜாம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இன்றும், நாளையும் வட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “மிக்ஜாம்” புயலாக வலுவடைந்து உள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேச மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதியினை 04.12.2023 அன்று முற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து 05.12.2023 அன்று முற்பகல் தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மணிக்கு 80 முதல் 100 கி.மீ. பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (03.12.2023) காலை 8.30 மணி வரை 30 மாவட்டங்களில் 1.14 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மழைமானி நிலையங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. மேலும், பின்வரும் விவரப்படி 28 மழைமானி நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03-12-2023 மிக கனமழை – திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள். (07 மாவட்டங்கள்)
கனமழை – வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள். (09 மாவட்டங்கள்)
04-12-2023 மிக கனமழை – திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள். (08 மாவட்டங்கள்)
கனமழை – கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்
(02 மாவட்டங்கள்)
கடலோர மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை
*03-12-2023 கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
*04-12-2023 செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
*கடலூர் மற்றும் விழுப்புரம், மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications