‛மே 20ல் ரெட் அலர்ட்’.. தமிழகத்தில் அதி கனமழை வாய்ப்பு! அடுத்த 5 நாள் சம்பவம் இருக்கு.. வானிலை மையம்
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கப்போகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட தினத்தில் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்படலாம். அதோடு மின்சார விநியோகத்திலும் இடையூறு ஏற்படலாம்.
இதில் மே 20ம் தேதி தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் காரணமாக மே 20ல் தமிழகத்தில் பல இடங்களில் 50 கிலோமீட்டர் வேக தரைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் என்றால் 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 204.5 மில்லி மீட்டர் முதல் அதற்கு அதிகமான மழை பதிவாக வாய்ப்பு இருக்கும்.
மேலும் அனைத்து வகையான போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சார வினியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி உயிரிழப்புகளையும் கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ரெட் அலர்ட் காரணமாக தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள தயாராகி வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications