டெல்லியில் வடியாத வெள்ளம்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
டெல்லி: டெல்லியில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. டெல்லி, இமாச்சல் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து விட்டது.
இதனால் சாலைகளில் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜரிவால் இருக்கும் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நீர் புகுந்துவிட்டது. டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்தது. இது போதாது என யமுனா நதி வெள்ளமும் அந்த பகுதி மக்களை பாடாய்படுத்துகிறது.
எல்லா இடங்களிலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், இருசக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் யமுனை ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.
நேற்று முன் தினம் யமுனை ஆற்றின நீர் மட்டம் 208 மீட்டராக உயர்ந்துள்ளது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெருவாரியான வெள்ளம் டெல்லிக்குள் புகுந்துவிட்டது. இன்றும் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் 50 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அடுத்த 4 முதல் 5 நாட்களில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இதனால் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
டெல்லி வெள்ளக்காடாக காட்சியளிப்பதற்கு காரணம் அங்கு பெய்யும் மழை அல்ல. யமுனை நதிக்கு கிடைத்த ஏராளமான தண்ணீர் வரத்துதான். டெல்லியின் முகுந்த்பூரில் 10 முதல் 12 வயதுடைய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேடு எது பள்ளம் எது என தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கையானது- மோசமான வானிலையை குறிக்கும். வானம் மேகமூட்டமாக இருத்தல், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுக்கும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications