மீண்டும் தமிழகம் நோக்கி வங்க கடலில் வலுவிழந்த புயல் சின்னம்-துறைமுகங்களில் புயல் கூண்டுகள்!
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்தது; தற்போது இந்த புயல் சின்னமானது மீண்டும் தமிழக கடற்கரை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திடீர் காற்றுடன் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஆந்திரா கடலோரப் பகுதியில் வங்க கடலில் புயல் சின்னமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. இந்த புயல் சின்னம் நேற்று முன்தினம் வலுவிழந்தது. தற்போது இந்த புயல் சின்னமானது மீண்டும் தமிழகம் நோக்கி நாளை திரும்பக் கூடிய வாய்ப்புள்ளது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

சென்னைக்கு கிழக்கே மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுநிலை நிலவுவதால் இன்று முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் வட தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது; அதிகாலையில் பனிமூட்டம் லேசான நிலையில் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. திடீர் காற்றுடன் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications