9 மணிநேரத்தில் 17.5 செமீ பதிவு.. வேதாரண்யத்தை புரட்டிப்போட்ட மழை.. கோடியக்கரையையும் விடவில்லை
நாகப்பட்டினம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலான ஒன்பதரை மணிநேரத்தில் வேதாரண்யத்தில் மட்டும் 17.5 செமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட தாலுகாக்களில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிக்குள்ளான ஒன்பதரை மணிநேரத்தில் வேதாரண்யத்தில் மட்டும் 175.50 மில்லிமீட்டர் (17.5 சென்டிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது. அதேபோல் கோடியக்கரையில் 134.40 மில்லிமீட்டர் (13.4 சென்டிமீட்டர்) மழையும், தலைஞாயிறுவில் 33.20 மில்லிமீட்டர் (3.3 சென்டிமீட்டர்) மழையும் பதிவாகி உள்ளது.
நாகப்பட்டினத்தில் 30.90 மில்லி மீட்டர் (3.9 சென்டிமீட்டர்), கீழ்வேளூரில் உள்ள திருப்பூண்டியில் 34.80 மில்லி மீட்டர் (3.5 சென்டிமீட்டர்) , வேளாங்கன்னியில் 27.40 மில்லி மீட்டர் (2.7 சென்டிமீட்டர்) மழையும் பதிவாகி உள்ளது. இந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்ச மழை என்பது திருக்குவளையில் பதிவாகி உள்ளது. திருக்குவளையை பொறுத்தமட்டில் இன்று மாலை 6 மணி வரை மொத்தம் 12.80 மில்லி மீட்டர் (1.2 சென்டிமீட்டர்) மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
இப்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகி இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கால்நடைகளும் இறக்கவில்லை. வீடுகளும் சேதமடையவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications