மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்.. தமிழகத்தில் அடுத்த 4 நாள் முக்கியம்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் என்பது அதிகரிக்கும். அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சமாக 2 மதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம், வடதமிழக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

இந்நிலையில் தான் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று முதல் வரும் 18 ம் தேதி வரை அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக உயரும். 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதில் 15ம் தேதி (அதாவது நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிக வெப்பம் இருக்கும்.
கோடை வந்தாச்சு.. புதுசா ஏசி வாங்க போறீங்களா.. இந்த 5 விஷயத்தை தெரிஞ்சிக்காம போகாதீங்க
அதன்படி பார்த்தால் வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேகர இடங்களில் 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கம். வடதமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழகம், புதவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
அதன்பிறகு வரும் 16ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 18 ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications