வெயில் இருக்கட்டும்.. இந்த மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைதான்! அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிலைமை: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.

மழை: தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
அடுத்த 4 நாட்கள்: இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது. அதேபோல இன்று முதல் ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
வெப்ப அலை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலையில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கம், சிக்கிமில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: நாடு முழுவதும் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் தமிழகத்தில் ஈரோடு 8ம் இடம் (108 டிகிரி ஃபாரன்ஹீட்) பிடித்துள்ளது. ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்திலும் ஒடிசாவின் புவனேஸ்வரில் (110°F) 2ம் இடத்திலும் உள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications