அக்டோபரில் 'ஹாட்'.. 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை! இந்திய வானிலை மையம் அலர்ட்
சென்னை: இந்தியாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த அக்டோபரில் அதிக வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அக்டோபர் மாதத்தின் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் வெப்பநிலை குறித்து, சூழலியலாளர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்தியாவில் அக்டோபர் மாதங்களில் பதிவாகும் இயல்பான வெப்பநிலையை விட, கடந்த 10 ஆண்டுகளாக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான வெயில், கடந்த 123 ஆண்டுகளில் பதிவான வெயிலை விட அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 2015, 2017, 2020, 2024 என 4 முறை அக்டோபரில் வழக்கத்தை விட அதிகமான அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 21.8 டிகிரி செல்சியஸ்தான் வெயில் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 26.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம். வெறும் 1.2 டிகரிதானே ப்ரோ என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் உலக அளவில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருவேளை அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டதை போல மற்ற எல்லா மாதங்களிலும் வெப்பநிலை அதிகரித்து, மொத்தமாக இந்தியாவின் சாராசரி வெப்பநிலை, அதைவிட 1.2 டிகிரி அதிகரித்தால் பேரழிவு ஏற்படும். ஒருபுறம் பெரும் மழையும், அதனால் வெள்ளமும் ஏற்படும். மறுபுறம் கடும் வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். இப்போது வானிலையை முன்கூட்டியே கணிப்பதால் சூறாவளி, புயல் மற்றும் கனமழை உள்ளிட்ட பாதிப்பிலிருந்து ஓரளவு நம்மால் மீள முடிகிறது. ஆனால் வெப்பநிலை உயர்ந்தால் வானிலையை முன்கூட்டியே கணிக்க முடியாது.
அதேபோல கடல் நீர் மட்டம் அதிகமாகும். இது சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர நகரங்களை கடுமையாக பாதிக்கும். இப்போது இருக்கும் குடியிருப்பு பகுதிகள் கூட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படலாம். இது பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தவிர வெப்பநிலை உயர்வு புதிய வகையான நோய்களையும் உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பல்லுயிர் கட்டமைப்பும் சிதையும் என்றும், பல உயிர்கள் இந்த புதிய சூழலுக்கு தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் அழியவும் வாய்ப்பு இருக்கிறது.
பயிர்களின் விளைச்சலும் கூட புதிய காலநிலையால் கடுமையாக பாதிக்கப்படும். இது உணவு பஞ்சத்தை உருவாக்கி, உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதானதாக மாறிவிடும் என்றும் சொல்லப்படுகிறது
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications