தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது? எல் நினோ எப்படி இருக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராதகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தென்னிந்திய தீபகற்ப பகுதியில் (தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகா) ஒட்டுமொத்தமாக இயல்பான மழைப்பொழிவு 88% - 112% இருக்கவே வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் மத்திய மற்றும் வட மாவட்டங்களில் இயல்பை விடச் சற்று கூடுதல் மழை பெய்யக் கூடும்.

north east monsoon

வரும் நவம்பர் மாதம் எல்நினோ பாதிப்புகள் உச்சத்தை தொடும். இது மார்ச் 2027 ஆம் ஆண்டு வரை பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போது பசிபிக் பெருங்கடலில் வலுவாக உள்ள எல்நினோ, 2027 மார்ச் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

வழக்கமாக எல் நினோ இந்திய அளவில் வறட்சியை ஏற்படுத்தினாலும் 2001 ஆம் ஆண்டு தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக்கு அதிக மழையையே தந்திருக்கிறது. மேலும் எல் நினோ காலத்தில் வங்கக் கடலில் புயல்களிந் எண்ணிக்கையும் தீவிரமும் குறைவாகவே இருக்கும். 20 ஆண்டுகளாக வானிலை ஆய்வாளர்கள் எல்லாம் இதை கவனித்துதான் வருகிறார்கள்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்த மழையின் அளவை எடுத்துக் கொண்டால், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 26 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 20 சதவீதம் குறைவு. சென்னையில் 38 செ.மீ. மழை பெய்தது.

north east monsoon

இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு. திருவள்ளூர் மாவட்டத்தில் 32 செ.மீ. மழையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 செ.மீ. மழையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா, ராயலசீமா, மாஹே, தென் கர்நாடகா ஆகிய இடங்களில் சாதாரண மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான மழையே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகள், தென்னிந்திய தீபகற்பத்தின் தெற்கு பகுதிகளில் இயல்பான மழை முதல் இயல்பை விட அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது.

அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் மழை பொழிவு சராசரியில் 85 சதவீதத்திற்கு கீழ் குறையலாம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலைதான். இந்த மாதம் அதிகபட்ச வெப்பநிலையும் நிலவும்.

தமிழகம், தென் ஆந்திராவுக்கு பலனை கொடுக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை வரும் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மொகபத்ரா தெரிவித்துள்ளார். இந்த எல் நினோ தமிழகத்திற்கு என்ன தர போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+