கை கொடுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்.. வெள்ள நிவாரண நிதியாக ஒரு நாள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பு!
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் பெய்த கன மழையினால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் இன்னும் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. புயழ் மழை வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.5,060 கோடி வழங்குமாறு முதலமைச்சர் கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியுள்ளது.
வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் இன்னல்களில் இருந்து தமிழக மக்களை காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் சேவைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கும் வகையிலும், அரசின் முயற்சியில் கைகோர்க்கும் வகையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications