2 உடல் மீட்பு.. வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் இன்னும் சிலர் சிக்கியுள்ளனரா? மீட்பு படை ஷாக் தகவல்
சென்னை: சென்னை வேளச்சேரி அருகே மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 4ம் தேதி திடீரென்று கட்டடம் ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் சிக்கிய 8 பேரில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்கள் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் இன்னும் சிலர் அங்கு சிக்கி உள்ளனரா? என்பது குறித்த கேள்விக்கு மீட்பு படையினர் பரபரப்பான பதிலை அளித்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக சென்னையில் கடந்த 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.

விடியவிடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி ஐந்து பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் திடீரென்று 50 அடி பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அடுக்குமாடி கட்டடம் பள்ளத்துக்கு விழுந்தது. கண்டெய்னர் சரிந்து விழுந்த நிலையில் இந்த விபத்து நடந்தது.
இதில் 8 பேர் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. உடனடியாக 6 பேர் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் சி சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் 2 பேரை மீட்க முடியவில்லை. இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடபட்டனர். நேற்று ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று இன்னொருவரின் உடல் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தான் மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு படையை சேர்ந்தவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இன்னும் இந்த பள்ளத்தில் வடமாநில தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மீட்பு படையை சேர்ந்தவர் கூறும்போது, ‛‛அதுபற்றி இன்னும் தெரியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு இன்னும் சிலர் சிக்கியுள்ளனரா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இன்னும் மீட்பு பணி என்பது முடியவில்லை. எங்களிடம் 2 பேர் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்தனர். நாங்கள் 2 பேரின் உடலையும் கண்டுபிடித்து கொடுத்துள்ளோம்'' என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ‛‛இந்த விபத்தின்போது அருகே இருந்த பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் யாராவது விழுந்து உள்ளார்களா? என்பதை தேடும் பணியை நாங்கள் தொடங்க உள்ளோம். அந்த பணி முடிவில் தான் இன்னும் யாரும் சிக்கி உள்ளனரா? இல்லையா? என்பது தெரியவரும். நாங்கள் அடையாறு இந்திராநகரில் இருந்தோம். சம்பவம் நடந்த முதல் நாளில் இருந்து நாங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 25 பேர் உள்ளனர். முதல் நாளில் மழை பெய்தது. தண்ணீர் தேங்கி இருந்தது. இது மீட்பு பணிக்கு சவாலாக இருந்தது. இதுதவிர போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் எங்களுடன் பணி செய்து வருகின்றனர்.
தண்ணீர் அதிகமாக இருந்ததால் தான் மீட்பு பணிக்கு 5 நாள் ஆகியுள்ளது. அதோடு மண்சரிவு ஏற்பட்டு இருந்தது. இடிந்து விழுந்த கான்கிரீட் சிலாப்புகளும் இருந்தது. இப்படியான சூழலில் ஒருவரை தேடுவது என்பது கஷ்டமான ஒன்றாகும். தண்ணீர் குறைந்த பிறகு தான் ஒவ்வொரு பகுதியையும் தேடினோம். இறந்தவர்களின் உடல் என்பது தண்ணீரில் இருந்து இருந்தால் தானாகவே மேலே வந்திருக்கும். ஆனால் உடல்கள் மண்ணுக்குள் சிக்கி இருந்தது. இதனால் உடல் வெளியே வரவில்லை. இதனால் மண் குவியல் அதிகம் உள்ள இடத்தில் தான் உடல் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தேடினோம். அப்போது துர்நாற்றம் வீசியதோடு சில தடயங்கள் கிடைத்தன. அதன்படி தற்போது 2 உடல்களை மீட்டு உள்ளது'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications