திருவொற்றியூர் டூ கோயம்பேடு.. சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போதுமான அளவுக்கு மழைப்பொழிவு இருந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவமழைகள் மழைப்பொழிவை கொடுக்கும். ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை பெற்றும் தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி தொடங்கி கோவை வரை பரவலான மழை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்திருக்கிறது. ஆனால் தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

chennai rain weather


அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கிய இந்த மழை, தற்போது வரை பெய்து வருகிறது. ஆனால், இந்த காலங்களில் பெய்ய வேண்டிய மழையைவிட இயல்பை காட்டிலும் 2% குறைவாகவே பெய்திருக்கிறது. மாவட்டவாரியாக பார்த்தால் சென்னையில் 504.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 1% அதிகம். சென்னையை தவிர, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கங்களில் மழை இயல்பை விட அதிக அளவில் பெய்திருக்கிறது.

இன்று காலை விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பின்படி, காலை 7 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அதேபோல ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+