எதிர்பார்க்கவில்லை.. பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று நாள் முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை தீவிரம் அடைந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடுகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

எனினும் இன்றும் இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தமிழக அரசும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தது. மழை நீர் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்கு உடன் தீர்வு காணவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனினும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று போல இன்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நிவாரண பணிகளை விரைந்து செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடந்து அங்கிருந்த மக்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கினார். முட்டளவு தேங்கியிருந்த மழை நீர்ல் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நிவாரண பணிகளை செய்து வருமாறு கூறினார்.
இந்த நிலையில், மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொட்டும் மழைக்கு மத்தியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
கனமழைக்கு மத்தியிலும் நேரடியாக தொகுதிக்கே வந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மழை பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications