அதென்ன கள்ளக் கடல் நிகழ்வு! கொப்பளிக்கும் கடல்! கன்னியாகுமரி பக்கம் இன்றும் போகாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கடல்களில் கள்ளக் கடல் நிகழ்வு நடைபெறுவதால் இன்று வரை யாரும் தென் தமிழக கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் தகித்து வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உள்பட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது. இதையடுத்து கத்திரி வெயில் தொடங்கியதும் மக்களுக்கு வெயில் பயம் மேலும் அதிகரித்தது.

weather south tamilnadu kanyakumari south tamilnadu


இந்த நிலையில் வருண பகவான் கொடையாளி என்பதை நிரூபித்தது போல் ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும், கனமழையும் பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும் தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கனமழை பெய்தது.

இந்த நிலையில் உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதாரண வானிலை சூழல்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.

எச்சரிக்கையின்படி கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும் ராமநாதபுரத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொருத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்வு இன்று இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரைக்கு வரவேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளக் கடல் நிகழ்வு எச்சரிக்கை காரணமாக குமரி கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. லெமூர் கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூடப்படும். கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டும். இவ்வாறு மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தென் தமிழக பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட்டது. அப்போது கன்னியாகுமரி கடலில் குளித்த சிறுமி ராட்சத அலையில் சிக்கி பலியானார். அது போல் லெமூ கடற்கரையில் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கி பலியாகினர். எனவே தான் இந்த முறை கள்ளக்கடல் நிகழ்வின் போது யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+