Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைந்த கோரப்பள்ளம் குளம்.. தூத்துக்குடியை நோக்கி பெருக்கெடுத்த வெள்ள நீர்.. கவனம் மக்களே

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: விடாது கொட்டி வரும் அதி கனமழையால் பெரு வெள்ளத்தில் தத்தளிக்கிறது தூத்துக்குடி. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் கோரப்பள்ளம் குளம் உடைந்து வெள்ள நீர் தூத்துக்குடி நகரத்தை நோக்கி பெருக்கெடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டி வரும் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் நேற்று மின்சாரம் முழுமையாக தடைபட்டது.

 Korappallam pond Broken Flood water overflowing towards Thoothukudi

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோரம்பள்ளம் குளத்தின் ஒரு பகுதியில் தற்போது உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் தூத்துக்குடி நகரத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகாலின் கடைசி குளமாக உள்ளது தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம். கோரம்பள்ளம் குளத்தின் மூலம் 2262 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளக்காலங்களில் வெளியேறும் உபரிநீர் உப்பாற்று ஓடை வழியாக கடலை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளம் வடக்கு தெற்கு என 2 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் அத்திமரப்பட்டி முதல் பெரியநாயகிபுரம் வரை அமைந்துள்ள பாசன குளமாகவும் மற்றொரு பிரிவு பெரியநாயகிபுரம் முதல் அந்தோணியார்புரம் வரை என இருப்பிரிவுகளாக கொண்டு பாசன வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.

கோரம்பள்ளம் குளத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் குளத்தில் 24 மதகுகள் உடையது. மேலும் பல கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கோரம்பள்ளம் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தினை நம்பி பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுபாடு, காலங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

 Korappallam pond Broken Flood water overflowing towards Thoothukudi

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து ஆண்டுதோறும் மழை காலங்களில் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் வரை வீணாக கடலுக்கு செல்வதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகுகளை சீரமைத்து முறையாக அதில் ரப்பர் சீட் பொருத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த மே மாதம் 12 கோடி ரூபாய் செலவில் கோரப்பள்ளம் குளம் தூர்வாரப்பட்டது.

இந்த நிலையில் வரலாறு காணாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. கோரப்பள்ளம் குளம் நிரம்பியுள்ளதால் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வெளியேறி தூத்துக்குடி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே 60 சென்டிமீட்டருக்கு மேல் பெய்துள்ள பெருமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி நகரம் இந்த பெரு வெள்ளத்தையும் எப்படி சமாளிக்கப்போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+