வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்
சென்னை: வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 17 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம்ம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதற்கிடையே இன்று சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18 ஆம் தேதி வரை கனமழை
17 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மழை பெய்யும்
சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு
* ஊத்து (திருநெல்வேலி) 9 செமீ.
* நாலுமுக்கு (இருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (இருநெல்வேலிர தலா 7.
* ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி) 6
* அடவிநயினார் அணை (தென்காசி), ராதாபுரம் (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி தலா 5.
* கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 4.
* பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), நம்பியாறு அணை (இருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி), குண்டாறு அணை (தென்காசி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), திருநெல்வேலி (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3.
* பாளையம்கோட்டை (இருநெல்வேலி), சிவலோகம் (சிற்றாறு-11) (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்). ஆதார் எஸ்டேட் (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சிற்றாறு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications