Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிருக்கு குட்பை.. வங்கக் கடலில் உருவான பிரஷர்! தமிழக வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்! மெட் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வரும் நிலையில் அதற்கு விடை கொடுத்து மழையை வரவேற்பதற்கான காலநிலை மாற்றம் தொடங்கி இருக்கிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குளிர் அதிகமாக இருந்தது. காலை நேரங்களில் பல இடங்களில் பனிமூட்டமும் காணப்பட்டது. இப்படியிருக்க, இப்போது வானிலை மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

weather Rain Tamil Nadu

தெற்கு கேரளக் கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதே நேரத்தில், வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனுடன், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் தனித்தனி கீழடுக்கு சுழற்சிகள் உருவாகியுள்ளன என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றங்களின் தாக்கமாக, பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் வாய்ப்பு உள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அருகிலுள்ள புறநகரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் நாளை மறுநாள் வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், 9ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+