வங்க கடலில் மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 2 நாளைக்கு சம்பவம் உறுதி! ஐஎம்டி சொன்ன அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும், தற்போது சென்னையிலிருந்து 940 கிலோமீட்டர் தொலைவில் நிலை கண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பொதுவாகவே, நவம்பர் டிசம்பர் ஆகிய ஆண்டு இறுதி மாதங்களில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை ஒரு கை பார்ப்பதும் ஆண்டுக்காண்டு நடைபெற்று வருவதை நாமும் கண்டு வந்திருக்கிறோம்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே தலைநகர் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்," நேற்று (24-11-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25-11-2024) காலை 0830 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்" என கூறப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளை வரும் 27ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது, தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இரவு 9 மணி நிலவரப்படி,"வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், மாலையில் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பகுதியில், திருகோணமலைக்கு தென்-தென்கிழக்கே, தென்-தென்கிழக்கே 740 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினம், புதுச்சேரியில் இருந்து 860 கிமீ தென்-தென்கிழக்கேயும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 940 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில், வட-வடமேற்கு திசையில் பயணித்து இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications