உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை கன்ஃபார்ம்..வானிலை மையம்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பம் வாட்டி வதைப்பதும் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்வதும் என அடிக்கடி கிளைமேட் மாறி வந்தது. அந்த வகையில், நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், எழும்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், நேற்று மாலை திடீர் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தாம்பரம், வண்டலூர், குன்றத்தூர், திருமுல்லைவாயில் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கடந்த பல மாதங்களாகவே வாட்டி வதைத்த வெயில் துத்துக்குடி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நேற்று நல்ல மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனிடையே, வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழ்நடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications