வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை விடாது! இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழை (Rain TN Weather Update) தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோன்று நாளை மறுநாள் வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வட மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Rain Chennai

இன்று 5 மாவட்டங்கள் டார்கெட்

* இன்று திங்கட்கிழமை: தமிழகத்தில் இன்று சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* நாளை செவ்வாய்க்கிழமை: திருவள்ளூர், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

13 ஆம் தேதி வரை

* நாளை மறுநாள் புதன்கிழமை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்கள் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 13 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
* வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை தான்

* சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழை அளவு செமீ

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிகத்தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

* காரைக்கால் (காரைக்கால்) 11 செமீ.
* காரைக்கால் AWS (காரைக்கால்), மணல்மேடு (மயிலாடுதுறை) தலா 10 செமீ.
* தழுதலை (பெரம்பலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 9 செமீ.
* புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 8 செமீ.

பரவலாக கொளுத்திய மழை

* தலைஞாயிறு (நாகப்பட்டினம்). பண்ருட்டி {கூடலூர்). தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), திருவாரூர் (திருவாரூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), திருவாரூர் AWS (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), புவனகிரி (கடலூர்), கே.எம்.கோயில் (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அரூர் (தர்மபுரி), வால்பேட்டை (கடலூர்) தலா 7 செமீ.

* கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), பெலாந்துறை (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருமானூர் (அரியலூர்). சுத்தமல்லி அணை (அரியலூர்), ஏலகிரி ARG (திருப்பத்தூர்), செந்துறை (அரியலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்). கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 6 செமீ.

மாயனூர் (கரூர்), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்). சேத்தியாத்தோப்பு (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), கும்பகோணம் (தஞ்சாவூர்), தல்லாகுளம் (மதுரை), தலா 5 செமீ.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

* வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
* வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

அடுத்த ஒரு வார அப்டேட்

* 11-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 12-08-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

* 13-08-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நிலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 14-08-2025 முதல் 17-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழைக்கு சான்ஸ்

சென்னையில் இன்று (11-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (12-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

* தமிழக கடலோரப்பகுதிகள்: 11-08-2025 முதல் 15-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* வங்கக்கடல் பகுதிகள்: 11-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12-08-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 13-08-2025: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரா ஒரிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 14-08-2025 மற்றும் 15-08-2025: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரா ஒரிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

* 11-08-2025: தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 12-08-2025: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா-வடக்கு குஜராத் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 13-08-2025: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா-வடக்கு குஜராத் கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய வடகிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 14-08-2025 மற்றும் 15-08-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+