வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் இன்று மழை விட்டு விளாசப் போகுது! வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

Rain Chennai

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

* 24-08-2025 முதல் 28-08-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

* 24-08-2025 மற்றும் 25-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

* 26-08-2025 முதல் 28-08-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (24-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (25-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 24-08-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. 24- 08 2025: தென்தமிழக கடலோ பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-08-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

28-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

24-08-2025: வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஒரிசா மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25-08-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

26-08-2025: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் வீசக்கூடும்.

27-08-2025: தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர, ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் வீசக்கூடும்.

28-08-2025: தென் மேற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவான மழை அளவு (செமீ):

* அறந்தாங்கி (புதுக்கோட்டை) 5.
* பரமக்குடி (ராமநாதபுரம்), இளையாங்குடி (சிவகங்கை) 4.
* விருதுநகர் (விருதுநகர்), சாத்தியார் (மதுரை), கல்லந்திரி (மதுரை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சிட்டம்பட்டி (மதுரை) தலா 3,
* தேவகோட்டை (சிவகங்கை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மேட்டுப்பட்டி (மதுரை). கூடலூர் பஜார் (நீலகிரி), மிமிசல் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 2.

* வட்டானம் (ராமநாதபுரம்), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தல்லாகுளம் (மதுரை), காட்பாடி (வேலூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்). பெரியபட்டி (மதுரை), சிவகாசி (விருதுநகர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அம்முண்டி (வேலூர்), ஓமலூர் (சேலம்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை: பாளையங்கோட்டை - 38.2° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 21.0 செல்சியஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+