தொடரும் மழை.. வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும் என்றும், கோவை, நீலகிரியில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் கொட்டி வருகிறது. கோவை, நீலகிரியிலும் கனமழை கொட்டி வருகிறது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 80 செமீ மழை கொட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இன்று கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. இதேபோன்று, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்படுகிறது. திருப்பூர், திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது.
இன்று 27-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், சுன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நாளை மறுநாள்
28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 31-05-2025 முதல் 02-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (27-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (28-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 27-05-2025 முதல் 31-05-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
27-05-2025: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-05-2025 முதல் 30-05-2025 வரை: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31-05-2025: வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
27-05-2025 முதல் 31-05-2025 வரை: தென்மேற்கு மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா, கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு செமீ:
* அவலாஞ்சி (நீலகிரி) 35,
* மேல் பவானி (நீலகிரி) 30.
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 21,
* எமரால்டு (நீலகிரி) 18,
* கூடலூர் பஜார் (நீலகிரி) 15.
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 14,
* மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 13,
* சின்கோனா (கோயம்புத்தூர்) 12,
* குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 11,
* செருமுள்ளி (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 10,
* பார்வூட் (நீலகிரி) 9,
* பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்). நடுவட்டம் (நீலகிரி) தலா 8,
* சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி) தலா 7.
* தேவாலா (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி) தலா 6.
* பாலமோர் (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), கெத்தை நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications