தென்தமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. ஏப்.29 வரை மழை நீடிக்கும்! - வானிலை மையம்
சென்னை: தென்தமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஏப்.29ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 8,
அடையாமடை (கன்னியாகுமரி) 6,
குளச்சல் (கன்னியாகுமரி), கமுதி (ராமநாதபுரம்), கமுதி ARG (ராமநாதபுரம்) தலா 5,
சுருளக்கோடு (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி) தலா 4,
நெய்யூர் AWS (கன்னியாகுமரி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 3,
பரமக்குடி (ராமநாதபுரம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சிங்கம்புணரி (சிவகங்கை), தக்கலை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) தலா 2,
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கன்னிமார் (கன்னியாகுமரி), களக்காடு (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 1 செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், தஞ்சாவூரில் 39.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறைந்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-39" செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-29" செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-04-2025 முதல் 29-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 23-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, 23-04-2025 மற்றும் 24-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
24-04-2025 மற்றும் 26-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
23-04-2025 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (23-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (24-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 23-04-2025 முதல் 27-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications