வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகும் montha புயல்.. தமிழகத்தில் அதீக கனமழை எங்கெல்லாம் பெய்யும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் உரு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டது அதன்படியே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக புயலாக மாறுகிறது. வரும் 27ம் தேதி உருவாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் புயலுக்கு Montha (மோந்தா புயல்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை முதல் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், முதல் சுற்று மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஏனெனில் வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் அழை இல்லை.. இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழை பொழிவு குறைந்துவிட்டது.

weather rain tamil nadu Chennai

இந்த நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகி உள்ளது தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் இன்று காலை கூறியிருந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 27ம் தேதி புயலாக உருவெடுக்க வாய்ப்பு உளள்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த புயலுக்கு montha புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாகவும், 27ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என்று கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், அக்டாபர் 27ஆம் தேதி சென்னையில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து, டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் நேற்று கூறுகையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களைநோக்கி நகருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடைய வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து இது புயலாகவும் (27ம் தேதி) மாற வாய்ப்புகள் அதிகம். ஆனால் உடனுக்குடன் வேகமாக வலுவடைந்தால், ஆந்திராவை நோக்கி நகரும். அதுவே அமைப்பு வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டால், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சாதாரண புயலாகவோ வடதமிழகம்-தெற்கு ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது " என்றார்.

இதனிடையே மழை அடுத்த ஏழு நாட்களுக்கு எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.

நேற்று (23-10-2025) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (24-10-2025) காலை 0530 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று 0830 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது...

இது, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025} தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகின்ற 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயவாகவும் வலுவடையக்கூடும்.

நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

24-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

28-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29-10-2025 மற்றும் 30-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் எப்படி இருக்கும் வானிலை

இன்று (24-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (25-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30" செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அக்டோபர் 24ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்:

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 15 செமீ, நாலுமுக்கு (திருநெல்வேலி) 12 செமீ. ஊத்து (திருநெல்வேலி) 11 செமீ, அரக்கோணம் (ராணிப்பேட்டை) 10 செமீ, பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) தலா 9,
காக்காச்சி (திருநெல்வேலி) 8 செமீ, திருவாலங்காடு (திருவள்ளூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருத்தணி (திருவள்ளூர்) தலா 7 செமீ,
மின்னல் (ராணிப்பேட்டை), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருவள்ளூர் (திருவள்ளூர்) தலா 6 செமீ மழை பெய்துள்ளது.

திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), மாஞ்சோலை (நிருநெல்வேலி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), கொட்டாரம் (கன்னியாகுமரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), குழித்துறை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-I) (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.

கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பொன்னேரி (திருவள்ளூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), அடையார் (சென்னை), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), குருந்தன்கோடு (கன்னியாருமரி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பூதலூர் (தஞ்சாவூர்), அணைகிடங்கு (கன்னியாகுமரி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), கிளாநிலை (புதுக்கோட்டை) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+