"திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம்.." வரலாறு காணாத மழை! திணறும் தெலுங்கானா.. எந்தளவுக்கு நிலைமை மோசம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அங்குப் பாதிப்புகள் ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டிய கனமழை அப்பகுதி மக்களைக் கடுமையாகப் பாதித்தது.
கடந்த வாரம் முன்பு வரை வடமாநிலங்களில் மட்டுமே கொட்டி வந்த கனமழை இப்போது தென்மாநிலங்கள் பக்கமும் திரும்பி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கொட்டும் கனமழை: இதனால் தெலுங்கானாவில் பல இடங்களில் மிக மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இந்த கனமழையால் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மாயமடைந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு தெலுங்கானாவில் கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 100+ கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்கு மின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 600 மிமீ அதிகமான மழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே இன்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிரிழப்பு: மேலும், அங்குப் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட முலுகு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை தான் மீட்கப்பட்டன. தெலுங்கானாவில் ஹனம்கொண்டா மற்றும் கம்மம் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஹபூபாபாத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அதில் ரூ.25,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர் அறிவித்துள்ளார். இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாரங்கல் மற்றும் ஹனம்கொண்டா பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை: கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநிலத் தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். உயிரிழப்புகள் அதிகரிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களைப் பாராட்டிய அவர், நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் மீட்பு: ஏற்கனவே, அங்குக் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications