வளரசவாக்கத்தில் பேயாட்டம்.. அண்ணா நகரில் ஆக்ரோஷம்.. டபுள் செஞ்சுரி அடித்த மிக்ஜாம் புயல் மழை.. ஷாக்!
சென்னை: மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் விடிய விடிய விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலைகளில் ஆறுபோல் காட்சியளிக்கும் மழை நீர் காரணமாக மக்கள் முடங்கி உள்ளனர்.
பல இடங்களில் சென்னை மழை இரட்டை சதம் அடித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்துள்ளது என்பதால் சென்னையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இதனால் கனமழை பெய்து வருகிறது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ல் கரையை கடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புயல் சென்னைக்கு அருகே நேற்று இரவு வந்ததால் கனமழை பெய்து வருகிறது.
விடாமல் பெய்த மழை: சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.
சென்னையில் இரட்டை செஞ்சுரி: சென்னையில் பல இடங்களில் மழை முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உள்ளது. சில இடங்களில் மழை இந்த பருவகாலத்தில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உள்ளது. | அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் விடாமல் மிக கனமழை பெய்து வருகிறது.
புயல் எங்கே உள்ளது: சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்திலும், மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றின் அளவு பதிவாகி உள்ளது.
சென்னையில் பெய்ய மழை அளவு: சென்னையில் அதிகாலை 6 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்.
வளசரவாக்கம் 203.1
மலர் காலனி 194.7
பெருங்குடி 189.3
கோடம்பாக்கம் 179.4
சோழிங்கநல்லூர் 177.3
அடையார் 166.5
புழல் 165
பெருங்குடி 160.2
கொளத்தூர் 157.2
அம்பத்தூர் 152.4
தேனாம்பேட்டை 145.5
திரு.வி.கே நகர் 143.1
முகலிவாக்கம் 142.2
ஐஸ் ஹவுஸ் 141.6
அண்ணாநகர் 140.4
மழை வார்னிங்: இந்த புயலை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications