மேடவாக்கத்தில் பயங்கர வெள்ளம்.. பேப்பர் கப்பல் போல் அடித்துச் செல்லப்படும் கார்கள்.. ஷாக் வீடியோ
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் மேடவாக்கத்தில் வெள்ள நீர் புகுந்து கார்கள் அடித்துச் செல்லப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதிக காற்றுடன் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் உடைந்து தரை தளம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கரணையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளத்தில் இருந்து அருவி போல் மழை வெள்ளம் கொட்டுகிறது. கார்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்கிறது.
இந்த மிக்ஜாம் புயலால் சென்னையே மிதக்கிறது. எங்கும் மின்சாரம் இல்லை. அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவில்லை. சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ இருக்கிறது. அதில் மேடவாக்கத்தில் கார்கள் அடித்துச் செல்லும் காட்சி உள்ளது.
ஏதோ பேப்பரில் செய்யப்பட்ட கார்கள் போல் அடித்து வரும் காட்சிகளை பார்க்கும் போது பலருக்கும் வேதனையை கொடுக்கிறது. தரைதளம், முதல் தளத்திலும் தண்ணீர் வந்துவிட்டதால் மக்கள் மொட்டை மாடிகளில் குளிரில் தங்கியுள்ளனர். போன்களில் சார்ஜ் இல்லாமல் எந்த ஒரு உதவிக்கும் யாரையும் கான்டாக்ட் செய்ய முடியாத சூழல் உள்ளது.
#Chennai floating Medavakkam region pic.twitter.com/BNsKPh692d
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) December 4, 2023
சென்னையின் பல்வேறு பகுதிகளில் படகு மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பலர் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள். மழையின் தீவிரம் இன்று இரவுதான் குறையும் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications