ஒரே பனி மூட்டமா இருக்கே .. ஜில்லென்ற குளிரில் நடுங்கும் சென்னை.. வானிலை மையம் சொன்ன அப்டேட்
சென்னை: சென்னையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம், அடுத்த சில நாட்களுக்கு பனி மூட்டம் நீடிக்கும் என அறிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலோடு வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்ததுவிட்டதாகவே தெரிகிறது. புயல் முடிந்த பின்னர் இன்னும் மழை எட்டி பார்க்கவில்லை. அதே நேரம் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நீடித்திருக்கிறது. இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது,

"இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(சனிக்கிழமை) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுகிழமையன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் தங்கச்சிமடம், நெல்லை ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவானது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் நெல்லை காக்காச்சி, சிவகங்கை பயணியர் விடுதி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை கொட்டியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு - லட்சதீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications