‛‛தென்னிந்தியாவுக்கு ஆபத்து’’.. குளிர் காலத்திலும் சைலன்ட்டாக அதிகரிக்கும் வெப்பம்! எச்சரித்த வானிலை
சென்னை: நாடு முழுவதும் தீவிர குளிர் நிலவி வருகிறது. ஆனால், தென்னிந்திய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் பொதுவாக 4 பருவ காலங்கள்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் 6 பருவ காலங்கள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தென் மாநிலங்களில் இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர் காலம், முன் பனி, பின் பனி என பிரிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி நடுப்பகுதி வரை முன் பனி காலகமாகவும், பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கி ஏப்ரல் நடுப்பகுதி வரை பின் பனி காலமாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

தற்போதும் நாம் முன் பனி காலத்தில் இருக்கிறோம். குளிர் அதிகமாக இருக்கிறது. பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவிலும், மேற்கு கடற்கரை பகுதியான கேரளாவின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் இயல்பான அளவை விட வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.7 டிகிரி செல்சியஸ். ஆனால் இந்த முறை பதிவான வெப்பம் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பத்தை விட அதிகமாக இருக்கிறது. இரவில் குளிர் அதிகமாக இருந்தாலும் பகல் நேரத்தில் பதிவாகும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கோடை காலம் குறித்த எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ காரணமாக இருக்கலாம். உலகின் மிகவும் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா -ஆசியா பகுதியில் ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும் அதேபோல அதற்கு எதிர் திசையில் உள்ள அமெரிக்க பகுதியில் உள்ள பசிபிக் கடலில் குளிர்ச்சியான காற்று மேலெழும் இந்த இரண்டும் ஒரு கட்டத்தில் ஒன்று கலந்து வானிலையை இயல்பாக வைத்திருக்கும்.

இந்த காற்றுதான் வெறும் 29 சதவிகிதமே உள்ள நிலப்பரப்பில் மழைபொழிவை உருவாக்குகிறது. ஆனால் இந்த இரண்டு பசிபிக் கடல் பகுதியிலும் ஏதேனும் ஒரு பகுதியில் காற்று உருவாவது தடைபட்டுவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படும். இதைத்தான் எல் நினோ என்று சொல்லப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்த அளவே பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications