வங்கக்கடலில் ஆட்டம் போட போகும் மிக்ஜாம் புயல்.. திடீரென மின்சாரத்துறை பெரிய வார்னிங்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து வருகிறது.. முக்கியமாக சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இடையே மின்சாரத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று மிக்ஜாம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முழுமையாக நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Michaung cyclone: Tamil Nadu Electricity board gives an important warning to the people

புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தேபிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே புயல்: மிக்ஜாம் இன்று புயலாக உருவெடுக்கும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.

இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் சென்னை அல்லது தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 5ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்சாரத்துறை எச்சரிக்கை: இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து வருகிறது.. முக்கியமாக சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது.

இந்த மழைக்கு இடையே மின்சாரத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் 5 உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின்சார சாதனங்களை முழுதாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும். மரங்கள், மின் கம்பங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Michaung cyclone: Tamil Nadu Electricity board gives an important warning to the people

வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதாரத்துறை எச்சரிக்கை: இந்த புயல் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பாகவும் முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி , தேவையான மருத்துவ பணியாளர்கள் எப்போதும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்! அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+