அமெரிக்காவை மிரட்டும் அதி தீவிர "மில்டன் புயல்.." விமானங்கள் ரத்து! "ஹை அலர்ட்"டில் புளோரிடா
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை இரவு மில்டன் புயல் கரையைக் கடக்க உள்ளது. புளோரிடாவை கடந்த 100 ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது இருக்க கூடும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் அச்சுறுத்தலால் டம்பா விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சக்தி வாய்ந்த அதி தீவிர புயல் தாக்க உள்ளது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த மில்டன் புயல், மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அதி தீவிர புயல் இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
புயல் காரணமாக அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும். அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், புயல் கரையைக் கடக்கும்போது புயலின் தீவிரம் சற்று குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை இரவு புளோரிடாவில் இந்த புயல் கரையக் கடக்க உள்ளது.
டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26 ஆம் தேதி ஹெலீன் புயல் தாக்கியது. இந்த புயலால் புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயல் பாதித்த 12 நாட்களில் மீண்டும் அதி திவிர புயல் புளோரிடாவை பதம் பார்க்க உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு மோசமான புயலாக ஹெலீன் புயல் அமைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications