கொளுத்தும் வெயிலுக்கு குட்டி பிரேக்! மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் அப்டேட்!
சென்னை: தென் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்து 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருக்குவளையில் 5 செ.மீ அளவு மழை பெய்தது. கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் சூழல் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: இதன்பிறகு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை தென்காசி, கேரளா எல்லைப் பகுதியில் லேசான மழை பெய்தது. இதன் பிறகு வெயில் அதிகரித்தது. ஒருவித அசவுகரியம் இருந்து வந்தது. நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வெயிலின் அளவு 2 டிகிரி கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தான் இந்த மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வெப்பம் சுட்டெரிக்கும்:
26.03.2024 முதல் 30.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31.03.2024 மற்றும் 01.04.2024: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
26.03.2024 முதல் 30.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications