டெல்லியை விடுங்க.. ஐதராபாத்தில் சரிபாதி பகுதிகள் மூழ்குமாம்.! நிலைமை ரொம்ப மோசம்! பதறும் ஆய்வாளர்கள்
ஹைதராபாத்: வட மாநிலங்களைப் போலவே ஹைதாபாத்திலும் சில நாட்களாக மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பகீர் ஆய்வு முடிவு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை மக்களை பாடாய்ப்படுத்துவது அனைவருக்கும் தெரியும்.
வட மாநிலங்கள் மட்டுமின்றி ஹைதாபாத்திலும் கூட இப்போது மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை: இதற்கிடையே ஹைதராபாத் பெருநகர் பகுதியில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக ஹைதராபாத் காலநிலை மாற்ற ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. தீவிர மழை என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், 2040இல் 1,740.62 மிமீ மழை பெய்யும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது.
இது 2020 ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் பெற்ற 241.5 மிமீ மழையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிகமாகும். காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஹைதராபாத் நகரில் உள்ள கட்டிடங்களில் 57.59 சதவீதமும் சாலைகளில் 22.7 கிமீ சாலைகள் அதீத பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருக்கிறது.
ஆபத்து: மொத்தம் 442.53 கிமீ பரப்பளவு பகுதியில் வெள்ளத்தின் ஆழம் 0.1-8 மீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நா்ம Waterproofing செய்யலாம். நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்ய மழை நீரைத் திருப்பிவிட்டால் மட்டுமே தப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு மொத்தம் ரூ. 4,964.60 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் கட்டிடங்களின் உள்ளே புகாமல் இருக்க ஒரு கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் கூரைகளுக்குள் நீர் நுழைவதைத் தடுக்கும் முறை தான் Waterproofing ஆகும். இது கட்டிடத்தின் வாழ்நாளை அதிகரிக்கும்.
என்ன காரணம்: காலநிலை மாற்றம் எந்தளவுக்கு மோசமான ஆபத்தை நமக்கு ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஹைதராபாத் மொத்தம் 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு எவை அதீத ஆபத்தை ஏற்படுத்தும் பகுதிகள் என்பதை இவர்கள் விளக்கியுள்ளனர். அதன்படி ஹுசைன் சாகர் மற்றும் முசி நதிக்கு அருகில் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கொத்தபேட், மன்சூராபாத், ஃபலக்னுமா, காச்சேகுடா, பேகம் பஜார் ஆகியவை முசி ஆற்றுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ளதால் இங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட அதிக ஆபத்து உள்ளதாம். ஃபலக்னுமா, கச்சேகுடா மற்றும் பேகம் பஜார் மண்டலங்களிலும், அதைத் தொடர்ந்து கோதாபேட், மன்சூராபாத் மண்டலங்களிலும் அதிக ஆபத்துள்ள கட்டிடங்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு: கச்சிபௌலி, வனஸ்தலிபுரம் மற்றும் கப்ரா மண்டலங்கள் ஒப்பீட்டளவில் மேடான இடங்களில் உள்ளதால் இங்கே ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் குறைவாக இருக்கிறது. சந்தாநகர் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் அங்கே வெள்ள பாதிப்பு மிகக் குறைவாகவே ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் முக்கிய குடியிருப்பு ஏரியாக்களாக அறியப்படும் குகட்பல்லியில் 0.3 -8 மீ ஆழத்திற்கும், வித்யாநகர் மற்றும் ராம்நகர் பகுதிகள் 0.2 -6.8 மீ ஆழத்திற்கும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக வேகமாக எந்தவொரு முறையான திட்டமிடலும் இல்லாமல் நகர் மயமாக்கலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் டி.விஜய் கிஷோர் கூறுகையில், "நகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. மேற்கு நோக்கி நகரம் வேகமாக வளர்கிறது. இப்போது நாம் அனைவரும் நிலத்தடி வடிகால் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications