எப்புற்றா.. சென்னையில் கண் மூடி திறப்பதற்குள் காணாமல்போன மழை வெள்ளம்! நெகிழ்ந்துட்டாங்க நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றிரவு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் சில மணி நேரங்களிலேயே வடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகிறார்கள்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை கொட்டித்தீர்த்தது.

 Netizens praise TN govt that Rain water logged in Chennai streets are drained immediately

குறிப்பாக சென்னையில் நேற்று காலை முதலே மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக நேற்று இரவு சென்னையில் பெய்த பெருமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மழை நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. சில முக்கிய சுரங்கப் பாதைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

அதே நேரம் மழை பெய்யத் தொடங்கிய உடனே மீட்புப் பணிகளுக்கு ஆயத்தமானது சென்னை மாநகராட்சி. மழை வெள்ளம் தேங்கி இருக்கும் பகுதிகளில் நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினர், முழு வீச்சில் ஈடுபட்டார்கள். அதன் விளைவாக பல இடங்களில் வெள்ளம் சில மணி நேரங்களிலேயே வடிந்து இருக்கிறது.

மழை காலங்களில் சென்னையில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளான அசோக் நகர், மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், மந்தைவெளி போன்ற இடங்களில் மழை நீர் தேங்கிய சில மணி நேரத்தில் மழுவதுமாக வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்து நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

குமார் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "ஜிபி சாலையில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றி, இந்த தீடீர் பெருமழையில் மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்த நெடுஞ்சாலைத் துறைக்கும் சென்னை மாநகராட்சிக்கு நன்றி." என்று குறிப்பிட்டு புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.

அதேபோல் சஞ்சய் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "சென்னையில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் 7 - 8 செமீ மழை. 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் சென்னை மந்தைவெளி பகுதியின் தேவநாதன் சாலையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகளால் இன்று சாலை தூய்மையாக உள்ளது. கால்வாய்களை அவ்வப்போது சுத்தம் செய்ய மாநகராட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

அனீஸ் அஹமது என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் சிறு மழைப் பேய்தாலே மழைநீர் நிற்கும்! புரசைவாக்கம் பகுதியில் தானா தெரு, சுற்றுப்புற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வடிகால் வழியாக தேங்காமல் வடிந்து விட்டது! அடைப்புகளை அகற்றிவிட்டால் இன்னும் சீக்கிரமாக வடிந்து விடும்! பாராட்டுக்கள்!" என்று பதிவிட்டு உள்ளார். இப்படி சமூக வலைதளங்களில் மக்களின் பாதுகாப்பை பெற்று வருகிறது தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+