அடுத்த 2 மணி நேரம்! கனமழை கொட்டப்போகுது.. நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல், தென்மேற்கு அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேல்போல் மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications