இன்னும் 5-6 நாள் மழை விடாது.. சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ் - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 5-6 நாட்கள் இரவில் மழை பெய்யும். காலையில் குளிர்ந்த சூழல் நிலவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலும் அடித்து வருகிறது. வடதமிழக மாட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

தலைநகர் சென்னையை எடுத்து கொண்டால் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் நேற்று இரவிலும் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை கொட்டி தீர்த்தது. அதிகாலை வரை இந்த மழை பெய்தது.
சென்னை ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் சென்னையில் வெயில் முற்றிலுமாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இரவில் மழை பெய்வதால் காலையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பிறகு மதியத்துக்கு மேல் மாலையில் வெயில் அடிக்கிறது.
இதற்கிடையே தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 5- 6 நாட்கள் இரவில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இவர் தனியார் வானிலை ஆர்வலர் ஆவார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். அந்த பதிவில் பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:
‛‛அடுத்த 5-6 நாட்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இப்படிதான் இருக்கும். டமால் டூமிலுடன் இரவில் மழை பெய்யும். காலையில் குளிர்ந்த சூழல் நிலவும். மலை நேரத்தில் வெயில் அடிக்கும். ரிப்பீட்டாக இது நடக்கும். மழை குறித்த எனது பதிவை கூட பார்க்க வேண்டாம். மொத்த சென்னையுமே மழையால் மூடப்படும். செப்டம்பர் புயல்கள் மெதுவாக நகரும் நிலையில் ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக 50 முதல் 70 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications