அடிச்சு பெய்யப்போகும் கனமழை.. இன்னைக்கும் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! உஷார்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 101.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்கிறது. இந்த காலத்தில் 108.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் வழக்கமான மழைப்பொழிவு, இயல்பை விட 7 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது.

திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்திருந்தாலும் கூட, விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி, திருப்பூர், கரூர், காரைக்கால், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை விட வெகு குறைவாகவே செய்திருக்கிறது.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இந்த காலத்தில் 68.5 மில்லி மீட்டர் அளவுக்கு சராசரியாக மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 8.7 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 87 சதவீதம் குறைவாகும். அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் 15.5 2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் வெறும் 0.4 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 97 சதவீதம் குறைவாகும்.
இப்படி இருக்கையில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை.30 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை.31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (27-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications