ஊட்டி டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் மூடல்.. மழை நீரில் தத்தளிக்குது நீலகிரி! கரண்ட் வேற இல்லை.. அதிகாரிகள் சபாஷ்
ஊட்டி: ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்றும் ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல். தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், ஷூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடல். அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. எனினும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இது சீசன் காலமாகும்.. வழக்கமாக இந்த நேரத்தில் லேசான மழை காணப்படும்.. ஆனால், ரெட் அலர்ட் வரை சென்றது இந்த முறைதான்.. இதை சுற்றுலா பயணிகள் உட்பட மாவட்ட மக்களே எதிர்பார்க்கவில்லை.

ரெட் அலர்ட் வார்னிங்
ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்ததுமே, மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கியது.. தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.. அத்துடன். தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைகாரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் ஆகிய நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் மழை காரணமாக மூடப்படுவதாக அறிவித்தது. இதனால், சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர்..
மின்சாரம் துண்டிப்பு
கடந்த 3 நாட்களாகவே நீலகிரியில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.. மரங்கள் விழுந்துள்ளன.. மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, குன்னூர் பகுதிகளில் 20 இடங்களில் மண் சரிவு, 43 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தீவிரமாக பெய்து வருவதால் பல இடங்களில் மண் அரிப்பு, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்துக்குள் பாயும் நிறைய ஓடைகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக, ஊட்டி அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 அடி நீளத்திற்கு இந்த மண் சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
அதேபோல, ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி, ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலையிலும், கேத்தி காவல் நிலையம் மீதும், மேரிஸ் ஹில் பகுதியில் வீட்டின் மீதும் மரம் விழுந்தது. கோடப்பமந்து செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரங்கள் விழுந்தன. எனினும், மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா தலங்கள் மூடல்
ஊட்டியில் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. நேற்று முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன.. நேற்று முன்தினமே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. இந்நிலை மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்றும் ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் அதிரடி
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல். தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடல், அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது.
அதேபோல, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் பல இடங்களில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தங்க வைத்து வருகிறார்கள்.. மேலும் பொதுமக்களுக்கு, பால், குடிநீர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
நேற்றுமுன்தினம் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது. நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில் 29.8 செ.மீ, ஊட்டியில் 7 செ.மீ, நடுவட்டத்தில் 8 செ.மீ, கிளன்மார்கனில் 10.5 செ.மீ,, குந்தாவில் 11.5 செ.மீ, கூடலூர் 15.3 செ., பந்தலூர் 13.7 செ.மீ. மழை பதிவானது. மொத்தத்தில் கடுமையான மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications