மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலேயே நீலகிரியில் மட்டும் ரெக்கார்டு! 3 சென்சுரிகள் பதிவான மழை! வெதர்மேன்
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு இடங்களில் மழையின் அளவுக்கு 300 மி.மீ.ரை தாண்டி பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்தமாக மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு இடங்களில் மழையான 3 சென்சுரிகளை பெற்றுள்ளது.

பார்சன் பள்ளத்தாக்கில் ஏற்கெனவே 384 மி.மீ. மழை பதிவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் 334 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் பார்சன் பள்ளத்தாக்கில் மிக அதிகபட்சமாக 718 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீ.):
அவலாஞ்சி- 353, பார்சன் பள்ளத்தாக்கில் 334, பொர்த்திமுண்ட் 320, மேல் பவானி 298, முக்கூர்த்தி அணை 183, எமரால்டு 182 , நடுவட்டம் ஏஆர்ஜி 154 , கூடலூர் 153 , நெல்லியம் 144, வென்ட் வொர்த் எஸ்டேட் 139 , பந்தலூர் 137, மேல் கூடலூர் 135 , குந்தா- 115, பைகாரா 109, ஓவேலி ஏஆர்ஜி 107, ஷோலூர் 105, கிலென்மோர்கன் 10, வுட் பிரையர் எஸ்டேட் 105, சிங்காரா- 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் சின்னகல்லார் 213, பெரியகல்லார் (வால்பாறை பிடிஓ)- 128, சிறுவாணி அடிவாரம் -128, சின்கோனா- 124, கீழ் நிரார்- 124, பரம்பிக்குளம்- 120, வால்பாறை பிஏபி 114, வால்பாறை தாலுக்கா அலுவலகம் 109, வால்பாறை ஏஆர்ஜி- 101, சோலையார் அணையில் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழக தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கேரளாவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்கிறது. அதிக காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடும் முறிந்தும் விழுந்தன. இந்த நிலையில் கோவையில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னகல்லாறு பகுதியிலும் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications