கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நேற்று கத்திரி வெயில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பரான் ஹீட்டை கடந்திருக்கிறது.

சென்னையிலும் வெயில் 100 டிகிரி பரான் ஹீட்டை கடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu

இன்று தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சமாக திருச்சியில் 40.1°C (104.1°F) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டின் இயல்பான வெப்பநிலையை விட 2.2°C அதிகமாகும்.

  • வேலூர் 103.5°F
  • மதுரை நகரம் 103.3°F
  • மதுரை விமான நிலையம் 102.2°F
  • பாளையங்கோட்டை 102.0°F
  • சென்னை மீனம்பாக்கம் 101.8°F
  • திருத்தணி 101.5°F
  • ஈரோடு 100.4°F
  • கரூர் பரமத்தி 100.4°F
  • நாகப்பட்டினம் 100.4°F
  • பரங்கிப்பேட்டை 100.4°F
  • தஞ்சாவூர் 100.4°F
  • சென்னை நுங்கம்பாக்கம் 100.0°F
  • புதுச்சேரி 99.8°F

என வெயில் பதிவாகியிருக்கிறது. சமவெளிப் பகுதிகளில் வெயில் கொளுத்தினாலும், தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேசங்களான கொடைக்கானலில் 23.0°C, உதகமண்டலத்தில் (ஊட்டி) 22.4°C மற்றும் குன்னூரில் 24.0°C என ஓரளவு இதமான சூழலே நிலவுகிறது. இருப்பினும் கொடைக்கானலில் இயல்பை விட 2.1°C வெப்பநிலை இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

வழக்கமாக மே இறுதி வாரத்தில் கத்திரி வெயில் முடிவடையும் போது வெப்பநிலை குறையத் தொடங்கும். ஆனால், தற்போதைய தரவுகளின்படி கரூர் பரமத்தியில் இயல்பை விட 2.7°C வெப்பமும், திருச்சியில் இயல்பை விட 2.2°C வெப்பமும் கூடுதலாகப் பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பகல் நேர வெயிலின் தீவிரம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+