Chennai Rain: அடித்து ஊத்தும் மழை.. இன்றைக்கும் விடாது.. 13 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Chennai Rain Update) தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று மதுரை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் எனவும், சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று மதுரையில் ஒரே நாளில் 13 செமீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. 1 மணி நேரம் வரை தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குவதால் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

non-stop-rains-lash-tamil-nadu-heavy-rainfall-predicted-in-13-districts-alert-for-chennai

கனமழை வெளுக்கும்

நேற்று மதுரையில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 13 செமீ மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அதாவது இன்று மட்டும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிரிசி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

13 மாவட்டங்கள் என்னென்ன

தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 11-09-2025 வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்

12-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13-09-2025 முதல் 17-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (11-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (12-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

11-09-2025 மற்றும் 12-09-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 13-09-2025 முதல் 15-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், சற்று உயரக்கூடும். 11-09-2025 முதல் 15-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

* மதுரை நகரம் (மதுரை) 13,
* தல்லாகுளம் (மதுரை) பஞ்சப்பட்டி (கரூர்) தலா 12,
* துறையூர் ARG (திருச்சிராப்பள்ளி), கடவூர் AWS (கரூர்) தலா 9,
* புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), புலிப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), பொன்மலை (திருச்சிராப்பள்ளி) தலா 8,

* பெரம்பலூர் (பெரம்பலூர்) 7.
* சேலம் (சேலம்), குப்பநத்தம் (கடலூர்), வாடிப்பட்டி (மதுரை), டேனிஷ்பேட்டை (சேலம்), குருவாடி (அரியலூர்), கே.ஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), பாடலூர் (பெரம்பலூர்) தலா 6,

* சுயத்தார் (தூத்துக்குடி), ஒகேனக்கல் (தர்மபுரி), அவலாஞ்சி (நீலகிரி), மேட்டூர் (சேலம்). பாலவிடுதி (கரூர்), ஒசூர் AWS (கிருஷ்ணகிரி), ஒசூர் (கிருஷ்ணகிரி), RSCL-3 அவதூர்பேட்டை (விழுப்புரம்). கல்லந்திரி (மதுரை), சிட்டம்பட்டி (மதுரை). பரமக்குடி (ராமநாதபுரம்). பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), அரக்கோணம் (ராணிப்பேட்டை). பூதலூர் (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர் தலா 5,

* புதுச்சத்திரம் (நாமக்கல்), பாலகோடு ARG (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), விருதாச்சலம் (கடலூர்), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கொடவாசல் (திருவாரூர்). எழுமலை (மதுரை). ஏற்காடு AWS (சேலம்), செங்கம் (திருவண்ணாமலை), விருத்தாசலம் ARG (கடலூர்), குளித்தலை ARG (கரூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), பெலாந்துறை (கடலூர்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 11-09-2025 முதல் 13-09-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15-09-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

11-09-2025 முதல் 13-09-2025 வரை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14-09-2025: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15-09-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+