எல் நினோ காலத்தில் வரும் வடகிழக்கு பருவமழை.. ஹீரோவா? வில்லனா? வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன
சென்னை: எல் நினோ காலத்தில் வரும் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது. காரணம் 2015ஆம் ஆண்டில் எல்நினோ காலத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு அபரிமிதமான மழை பெய்து சென்னை வெள்ளக்காடானது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கப்போகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பருவமழை: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் பயன் பெறுகின்றன. தமிழகத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடியது வடகிழக்கு பருவமழை.

எப்படி இருக்கும்: இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது நாளை 22ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக அக்டோபரில் 177.2 மில்லி மீட்டர், நவம்பரில் 178.8 மில்லி மீட்டர், டிசம்பரில் 92 மில்லி மீட்டர் என மொத்தம் தமிழகத்தில் 448 மில்லி மீட்டர் மழை இயல்பாக பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வாளர்கள்: வடகிழக்குப் பருவமழையின் இயல்பான மழை அளவு 44.8 சென்டிமீட்டர். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகாலமாகவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது. நடப்பாண்டு எல்நினோ காலம் என்பதால் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் மக்களுக்கு எப்படி பயனளிக்கும் என்பது பற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குட்டிப்பையன்: எல் நினோ என்றால் ஸ்பானிய மொழியில் குட்டிப் பையன் என்று பொருள். எல் நினோ ஏற்படும் போது, கிழக்கு வெப்பமண்டல பசிபிக் கடலோர நீர் வெப்பமடைகிறது மற்றும் கடலுக்கு மேலே உள்ள வளிமண்டல அழுத்தம் குறைகிறது. இது கடல் வெப்பநிலை, கடல் நீரோட்டங்களின் வேகம் மற்றும் வலிமை மற்றும் கிரகத்தின் வானிலைகளை கூட கடுமையாக பாதிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் உலகளாவிய வளிமண்டல சுழற்சியை பாதிக்கின்றன மற்றும் நீண்ட, குளிர்ந்த குளிர்காலங்களைக் கையாளும் பல்வேறு பகுதிகளுக்கு வழிவகுக்கும்
தயார் நிலை: மத்திய விவசாய அமைச்சகமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் இந்த ஆண்டு எல் நினோவை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றன. 2001ஆம் ஆண்டு முதல் 2020 க்கு இடையில், இந்தியா ஏழு எல் நினோ ஆண்டுகளைக் கண்டுள்ளது. இவற்றில், நான்கு ஆண்டுகள் வறட்சிக்கு வழிவகுத்தது, இந்த காலப்பகுதி கோடையில் விதைக்கப்பட்ட உற்பத்தி வீழ்ச்சியையும் கண்டது.
வறட்சி நிலையா?: இந்த நிகழ்வின் மோசமான தாக்கம் 2009-2010 இல் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் எல் நினோவின் விளைவாக கடுமையான வறட்சியை ஏற்படுத்தியது மற்றும் குறிப்பிடத்தக்க அளவு மழை தாமதம் ஏற்பட்டது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளரான இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு இந்தியா சாதாரண பருவமழையைப் பெறும் என்று இன்று கணித்துள்ளது.
மழை பொழிவு: இந்த ஆண்டு, எல் நினோவின் தாக்கத்தால், மழைப்பொழிவு பாதிக்கப்பட்டால், அரிசி சர்க்கரை, தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற பயிர்கள் பாதிக்கப்படலாம், இது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், மேலும் பணவீக்கத்தை ஏற்படுத்தும். எல் நினோ மழைப்பொழிவை பாதிக்கும் மற்றும் கடுமையான வெப்ப அலைகள் மற்றும் வறட்சிக்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பை சமாளிக்க முடியுமா: பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவமழையின் இரண்டாம் பாதியில் இயல்பை விட குறைவான மழை பெய்யும். மாவட்ட அளவில் தற்செயல் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் எல் நினோவால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பை இந்தியா சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. எல் நினோவை எதிர்கொள்ள கடந்த ஆண்டில் இருந்தே தயாராகி வருகிறது இந்தியா. அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும் எல் நினோவை மனதில் வைத்துதான்.
வெதர்மேன்: இதனிடையே நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தனியார் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென் தமிழகத்தில் அதிகமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சென்னை, டெல்டா மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியை விட குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார் பிரதீப் ஜான்
அக்டோபர் டூ டிசம்பர்: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நவம்பர் இறுதியிலும் டிசம்பர் மாதத்திலும்தான் சராசரியை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார் பிரதீப் ஜான். மொத்தமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 45 செமீ மழை சராசரியாக பெய்யக்கூடும். அதை ஒட்டியே நடப்பாண்டு இருக்கும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
டிசம்பர் மாத மழை: கடந்த 2015ஆம் ஆண்டு எல் நினோ காலத்தில் நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு மேல்தான் மழை தீவிரமடைய ஆரம்பித்தது. நவம்பர் இறுதியில் கொட்டித்தீர்த்தது கனமழை டிசம்பர் 1, 2ஆம் தேதி பெய்த பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி பெருவெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில ஆண்டு காலமாக அது மாதிரியான ஆபத்துக்கள் எல்லாம் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்குவதை பார்க்க முடிகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கப்போகிறது. முதலில் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் டிசம்பர் மாத பெருமழையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பது வானிலை ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications