நங்கூரமிட தயாராகும் Cyclone Michaung: சென்னையில் எத்தனை நாள் மழை தெரியுமா? அந்த ஒரு நாள் தீவிரமாமே!
சென்னை: சென்னையில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலையில் எப்போதெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து நார்வே வானிலை மைய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் அதன் கொள்ளளவை எட்டி வருகின்றன.

ஆனால் காற்றழுத்தம் உருவாகி, அது புயல் என அடுத்தடுத்த நிலைகளை அடையவில்லை. உருவான ஒரு மிதிலி புயலும் ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் அந்தமான் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்தம் உருவாகக் கூடும் என சொல்லப்பட்டது. அதுவும் தாமதமானது.
இந்த நிலையில் நாளை உருவாகும் என சொல்லப்படுகிறது. இது புயலாக வலுப்பெற்றால் அதற்கு மிக்ஜாம் புயல் என பெயரிடப்படும். இந்த பெயரை மியான்மர் பரிந்துரைத்துள்ளது. இது டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும். அப்போது கிழக்கு இந்தியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். 27ஆம் தேதி முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேனும் இன்னும் 6 நாட்களில் சக்கரம் உருவாகும் என கணித்துள்ளார். அவருடைய ட்வீட்டுகளில் இந்த பருவமழை சூப்பரான ஒன்றாக இருக்க போகிறது. வரும் 29ஆம் தேதி அதாவது நாளை முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழை அதிகரிக்கும். அனைவரது கவனமும் சக்கரம் உருவாவதில்தான் இருக்கிறது.
இதில் நிறைய டிவிஸ்ட்கள் இருக்கும். இன்னும் இரு நாட்களில் அதை டிராக் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நார்வே வானிலை மையம் கூறியிருப்பதாவது: சென்னையில் இன்று காலை, மதியம் மாலை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை மாலை முதல் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அது போல் 30ஆம் தேதியும் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டிசம்பர் 2,3 தேதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதன் பிறகு வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications