தப்பிய சென்னை.. தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு ‛ஆரஞ்ச் அலர்ட்’.. வெளுக்கப்போகும் மிக கனமழை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டும் வருகிறது.
அதேபோல் தான் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்கள், கடலேரா மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை மிதமான அளவில் பெய்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 3 நாட்கள் காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தான் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டியெ தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் தமிழ்நாட்டில் பருவமழை என்பது தீவிரமாகி வருகிறது. அதன்படி இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதகிளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதோடு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் வெளியே சென்றால் ரெயின் கோட், குடை எடுத்து செல்ல வேண்டியது பாதுகாப்பானதாகும்.
இந்த ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் தப்பினாலும் கூட பல இடங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்றயை தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications