மசூதியில் நுழைந்த ஜனம்.. கடலை நோக்கி வெள்ள நீர்.. காயல்பட்டினம் வெறும் 50%தானா? மீளும் தூத்துக்குடி
தூத்துக்குடி: பேய்மழையால் நிலைகுலைந்து போன காயல்பட்டினம், மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.. வெள்ள நீரும் வடிந்து கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களை கதிகலங்க செய்துள்ளது.. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரையில் கன்னியாகுமரியில் இயல்பாக 518 மிமீ மழை பெய்ய வேண்டும்.

2வது இடம்: ஆனால் 1100 மிமீ மழை பெய்துள்ளது. காரைக்காலில் இயல்பாக 938மிமீ பெய்ய வேண்டியதற்கு பதிலாக 1045 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக, 766 மிமீக்கு பதிலாக 1088 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லையில் இயல்பாக 483 மிமீ மழைக்கு பதிலாக 1211 மிமீ மழை பெய்துள்ளது. ஆக, மேற்கண்ட இடங்களில் வட கிழக்கு பருவமழை கூடுதலாக பெய்திருக்கிறது.
இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. தாமிரபரணி கரையோரம் உள்ள பல கிராமங்கள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன..
குடிநீர் பால்: இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினர்.. இந்த பகுதி மக்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டு, நிவாரணமுகாம்களில் தங்க வைத்தனர். மேலும், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப்பட்டன.
அதேபோல, காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 950மிமீ மழை கொட்டி தீர்த்தது. காயல்பட்டினத்தில் மட்டும் இந்த 2 நாளில் 116 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழை என்கிறார்கள்.. அதாவது தமிழக வரலாற்றிலேயே காயல்பட்டினத்தில் பெய்த மழை அளவு 2-வது அதிகபட்ச மழை பதிவாகும்.
பாதுகாப்பு ஏற்பாடு: இதனால், காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.. அங்குள்ள சுலைமான் நகர், மங்களா நகர், சல்லி தெரடு, சீதக்காதி நகர், காட்டு தைக்கா தெரு, பரிமார்தெரு, காட்டு மொகுதும் பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பே, அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுவிட்டனர்.
பல தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையானவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள மசூதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அறிவிப்பு: அதுபோலவே, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பையும் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.
தற்சமயம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கடந்த 3 தினங்களாகவே காயல்பட்டினத்தில் கரண்ட் இல்லாமல் உள்ளது.. கரண்ட் இல்லாததால், தொலைபேசி, நெட் வசதியும் இல்லை. இதனால், அவர்களால் வெளியுலகை தொடர்பு கொள்ள இயலாமல், பெரிதும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். தற்போது காயல்பட்டினத்தில் மழை பெய்யவில்லை... ஆனால், இன்று காலையிலிருந்தே மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டு வருகிறது..
மீளும் காயல்பட்டினம்: பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் வெள்ளம் இன்னும் வடியவேயில்லை.. வெறும் 50 சதவீதம் வெள்ளம் மட்டுமே வடிந்துள்ளதாக தெரிகிறது.. தேங்கியுள்ள வெள்ள நீரானது கடல் பகுதிக்கு மெல்ல நகர்ந்து வருகிறது.. மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியும், நிவாரணமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. இதனால், மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கிறது காயல்பட்டினம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications