ஊட்டியில் உறைபனி! சாலைகளில் வெள்ளை கம்பளம்.. நடுங்கும் உதகை! காரணம் என்ன?
ஊட்டி: உதகையில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் அங்கு கடுங்குளிரில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் நவம்பர் முதல் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் உறைபனி ஏற்படவில்லை.

நீர் பனி விழுவதும் தாமதமானது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் காலை முதலே ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், புற்கள், சாலைகள் மீது உறைபனி அதிகளவில் இருக்கிறது. அதிலும் தலைகுந்தா பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது போல் உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உள்ளது. மேலும் காந்தல், பிங்கர் போஸ்ட் பகுதிகளிலும் அதிக அளவு உறைபனி உள்ளது.
#WATCH | Nilgiris, Tamil Nadu: A layer of frost covered the Thalaikundha area of Nilgiris after 0 degrees Celcius temperature was recorded this morning. pic.twitter.com/Z43LzgaGvb
— ANI (@ANI) December 24, 2023
இந்த நிலையில் கடுங்குளிரால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 50 நாட்களுக்கு பிறகு உறைபனி தொடங்கியது. காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரால் மக்கள் நடுங்குகிறார்கள். சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இனி வரும் நாட்களில் இந்த உறைபனி அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஊட்டியில் கடந்த 22 ஆம் தேதி குறைபட்ச வெப்பநிலை 11 டிகிரியாக இருந்தது. தற்போது பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சாலைகள், வாகனங்களின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி நிலவி வருகிறது. காலம் தாமதமாக உறைபனி தோன்றியதற்கு காரணம் தெரியவில்லை
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications