போன் கூட பேச முடியல.. சென்னை முழுவதும் நெட்வொர்க் பிரச்சனை.. இதுதான் காரணமாம்! வந்தது குட் நியூஸ்!
சென்னை: சென்னையில் மழை ஓய்ந்து, மக்கள் மீண்டு வரும் நிலையில், நெட்வொர்க் பிரச்சனையால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என மொபைல் சேவை நிறுவனம் ஒன்றில் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. நகரின் பெரும்பாலான பகுதிகளில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதந்தன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதனிடையே மக்கள் இன்னொரு பெரிய சிக்கலையும் எதிர்கொண்டனர். சென்னை மக்கள் மொபைல் போன்களில் நெட்வொர்க் சேவைகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்காமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நெட்வொர்க் பிரச்சனையால் சென்னை மக்கள் அவதி: சார்ஜ் இருந்தும், நெட்வொர்க் கிடைக்காததால், நெருங்கியவர்களுக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், வெளியூர்களில் வசிக்கும், அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும், சென்னையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். மேலும் கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் கடும் அவதியடைந்ததால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகி, ஆந்திராவை நோக்கிச் சென்ற பிறகு, சென்னையில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது. ஆனாலும், இன்னும் நெட்வொர்க் பிரச்சனை தீரவில்லை. பாதிக்கப்பட்ட நெட்வொர்க் சேவைகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நெட்வொர்க் பிரச்சனையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் இன்று தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம். சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படவில்லை. மெட்ரோ ரயிலில் பயணிக்க, ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் சிக்கலுக்கு காரணம்: இந்நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான நெட்வொர்க் பிரச்சனைக்கான காரணம் என்ன, எப்போது சீராகும் என்பது குறித்து, ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், "புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கடந்த 2 நாட்களாகவே, தொலைத்தொடர்பு சேவைகளுக்கு தற்காலிக ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி வசதியுடன் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
செல்போன் சிக்னல் கோபுரங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பேட்டரிகள், கடுமையான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், யூசர்களால் போன் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தவிர்க்க, பேட்டரிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், காலை முதல் பல்வேறு இடங்களுக்கும் மின்சாரமும் வழங்கப்பட்டு வருவதால், ஒவ்வொரு பகுதியாக தற்போது சிக்னல் பிரச்சனை தீர்ந்து வருகிறது. பெரும்பாலானோருக்கு, இப்போது நெட்வொர்க் பிரச்சனை தீர்ந்திருக்கும். விரைவில் அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடையும்" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications