மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: நீலகிரியில் இன்று 4 வட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ள நிலையில், நீலகிரியில் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நேற்றும் நீலகிரியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முன்னெச்சரிகை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் நேற்று முன் தினம், நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று ஒரு நாளில் மட்டும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செமீ மழை பதிவாகியது.

மிக கனமழை எச்சரிக்கை
இதேபோல் நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியுள்ளது. நேற்று இரவும் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த நிலையில் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையினை வானிலை மையம் விடுத்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாணவர்களின் பாதுகாப்பை கருதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது.
4 தாலுகாக்கள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது" என்று கூறியுள்ளார். இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசியில் இன்று கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மழை அளவு:
* அவலாஞ்சி (நீலகிரி) 14,
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 13,
* உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) 9.
* தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PTD (கோயம்புத்தூர்) தலா 8.
* மேல் பவானி (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 7.
* நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பார்வூட் (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி). நெய்யூர் AWS (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 4,
* திருவாரூர் (திருவாரூர்), குழித்துறை (கன்னியாகுமரி). தர்மபுரி PTO (தர்மபுரி), சீர்காழி (மயிலாடுதுறை). நன்னிலம் (திருவாரூர்). செருமுள்ளி (நீலகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ஆட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி). மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி). வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications