சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்! கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவடைந்தது. கோவை தொடங்கி கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களிலும் இது இயல்பை விட அதிக மழையை கொடுத்தது. ஆனால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு போதுமான மழை கிடைக்கவில்லை. தூத்துக்குடியும் இயல்பை விட குறைவான அளவே மழையை பெற்றிருந்தது.

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை இது இயல்பை விட 18% கூடுதல் மழையை கொடுத்திருக்கிறது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதேபோல இன்று காலையில் சென்னையில் லேசான மழை பெய்திருந்தது.
இந்நிலையில், மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications